Monday, December 26, 2011

உன் வாழ்கை உன் கையில்

    சூப்பர் ஸ்டார் என்றாலே நமது இதயத்தில் தோன்றுபவர் மாபெரும் எளிமையான அற்புத மனிதர் ரஜினி அவர்கள் தான் என்பதும் அனைவராலூம் நேசிக்கபடுபவர் என்பதும் தெரிந்ததே.

    அவரது படங்களில் முக்கிய அம்சங்கள் அவரது ஸ்டைல்,மேனரிசம்,பன்ச் டைலாக் தான்.அவருடைய ஸ்டைல் என்றுமே அழியாதது.
    ஆனால் படங்களுக்கு மட்டும் தான் பன்ச் டைலாக் என்பதை கடந்து சற்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் வாழ்க்கைகான அடிப்படை தத்துவங்கள் அதிகமானவற்றை நம்மால் பெற முடியும்.
 
     வெறும் பன்ச் டைலாக் அல்ல அவை வாழ்க்கைகான எளிமையான தத்துவங்கள் என்று சூப்பர் ஸ்டார் அவர்களின் முக்கிய வசனங்களை (பன்ச் டைலாக்) திரு பாலசுப்ரமணியம் மற்றும் திரு ராஜாகிருஷ்ணமூர்த்தி அவரகள் சேர்ந்து "ரஜினியின் பன்ச் தந்திரா " என்ற புத்த்கத்தை வெளியிட்டு உள்ளனர்.

    வாழ்க்கைகான அர்த்தங்களை தேடுபவருக்கும் மேலும் தங்களது வாழ்க்கையினை சிறப்பாக அமைத்து கொள்ளவும் இந்த புத்தகத்தில் உள்ள
தத்துவங்கள் உதவும் என்ற நம்புகிறேன்.நீங்களும் நம்பிக்கை கொள்வீர்கள்.
ஏனென்றால் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.